Friday, December 29, 2017

பொன்மாலைப் பொழுதில் 9

வட்டநிலா உன் வாசல் வந்து வெளிச்சம் வீசும்
வானவிலுன் உடையிலமர்ந்து வர்ணஜாலம் காட்டும் 
தென்றல் உனை மெல்லத் தழுவி வேர்வை துடைக்கும்  
நட்சத்திரங்கள் உன் கூந்தல் மேல் படர்ந்து அழகூட்டும்
சந்தனம் உன் பொன்னுடல் ஏறி நறுமணம் கூட்டும்
குயில்கள் தம்கூடு விட்டுன் வீடு வந்து இசை மீட்டும்
செவ்வானம் நம் மண்ணில் இறங்கி வந்து மஞ்சள் நீராட்டும்
வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்

***

காதல் ...
கல்லைக் கனியாக்கும் கண்கட்டு வித்தை
மலையை முகிலாக்கும் மாயாஜாலம்
சிலருக்கு மனம் இருக்கும், இடம் மாறும்
சிலருக்கு மனம் இறஇக்துவோகும்,  தடம் மாறும்

காதல் ...
வந்தால் பேச விஷயங்கள் நிறைய இருக்கும்
வந்தவுடன் பேச வார்த்தை வராது தவிக்கும் 
அழகாய்த் தோன்ற ஆசை தோன்றும்
ஆரைப் பார்த்தாலும் அவளா(னா)ய் தெரியும்

காதல் ...
அருகிலிருந்தால் சிறகு முளைக்கும்
தூரச்சென்றால் துயரம் பிறக்கும்
எதையும் மறக்கும் வலுவைத் தரும்
எல்லாம் துறக்க துணிவைத் தரும்

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ ?


***

அன்பு எங்கும் நிலவுகவே !
பந்தம் பாசம் பொங்கி வழிகவே !
பிள்ளை மனதைப் பெற்றோர் பெருகவே !
மழைபெய்து மண் செழிக்கவே !
சாந்தம் அகிம்சை உலகை ஆள்கவே !
இறைநம்பிக்கையில் இப்பூமி இயங்குகவே !
நல்லோர் நலமாய் வாழ்கவே !
நலிந்தோர் வாழ்வு மேம்படுகவே !
மன்னிப்பு மலிவாய் எங்கும் கிடைக்கவே !
சிரித்துச் சிரித்து உலகம் மகிழ்கவே !
மறப்பதும் மன்னிப்பதும் தாரகமந்திரம் ஆகுகவே !
நல்லொழுக்கம் மக்கள் நெஞ்சில் நிறைகவே !
ஆக்கப்பூர்வச் சிந்தனை அவணிமுழுதும் படர்கவே !
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

***

அரிதாரம் பூசாது அசத்துமுன் அழகு அழகு
ஆணவமில்லாது பழகுமுன் இயல்பு அழகு
கடையில் பேரம் பேசுமுன் சண்டை அழகு
காலையில் வாசம்வீசுமுன் கொண்டை அழகு
இடை மறைக்கும் உன் உடை அழகு
உடை மறைக்கா உன் இடை அழகு
பூவைப்பார்த்துப் பூரிக்குமிப் பூவை அழகு
புதுமைபல செய்யத்துடிக்குமிப் பாவை அழகு
குடையிடையே உடைநனையாதோடும் உன் ஓட்டம் அழகு
குழந்தைகளோடு குழந்தையாகி நீ போடும் ஆட்டம் அழகு
கோபங்கொள்கையில் உன் மௌனம் அழகு
சோகங்கொள்கையில் உன் ஞானம் அழகு
சத்தமின்றிச் சிந்துமுன் சிரிப்பு அழகு
கண்ணீரின்றிக் கரையுமுன் அழுகை அழகு
உண்மை சொல்லனுமென்றால் நீ செய்யும் எல்லாமே அழகு
சுருங்கச்சொன்னால் நீ ரொம்ப *அழகு ... அழகு ... அழகு*

Friday, December 8, 2017

பொன்மாலைப் பொழுதில் 8

கழுத்து வரை பணம்
நெஞ்சில் நிறைய விடம்
எதற்கெடுத்தாலும் சினம்
யாரைப்பார்த்தாலும் உதாசீனம்
எழுத்தில் மட்டுமே நற்குணம்
போதுமிந்த துர்குணம்
அழியட்டும ஆணவம்
மாறட்டும் சுபாவம்
இனி தினம் தியானம்
வேணும் ஞானம்
உணரணும் வாழ்க்கையின் தத்துவம்
புரியணும் பரம்பொருளின் மகத்துவம்
வரம் தரவேண்டும் சிவம்
எங்கே அந்த சிவம் ? 
யார் சிவம் ?
*யார் ... யார் ... சிவம் ?*

---

என்ன வருத்தம் உனக்கு,
ஏது செய்தாய் பிணக்கு;
கருவி நீ, காரியமெல்லாம் அவனது,
அசைவு மட்டும் உன்னது, ஆட்டமெல்லாம் அவனது;
நீ நீயாய் இரு,
வெளியிலிருந்து உன்னைப் பார்த்திரு,
உன்னுடையது ஏதுமில்லை என்பதை உணர்ந்திரு;
நேசிப்பவர் நேசிக்கட்டும்,
வெறுப்பவர் வெறுக்கட்டும்;
படைத்தவனுக்குத் தெரியும் உன் பாதை
வாழ்க்கை செல்லும் வழியில் செல்;
தெரிந்தா வந்தாய் நீ ?
தெரிந்தால் வந்திருப்பாயா நீ ?
கிடைத்தால் ஆடாதே,
கைவிட்டுப் போனால் அழாதே,
*தலைமகனே கலங்காதே, தனிமை கண்டு மயங்காதே*

---

இதுவரை எத்தனையோ ஆணுடன் பேசியதுண்டு.
ஏன் இவனுடன் கூடத்தான்
எத்தனையோ முறை அளவாடியதுண்டு.
கள்ளமில்லாது சிரித்துச்சிரித்துப் பேசி பழகியதுண்டு.
உரிமையோடு சண்டை கூட போட்டதுண்டு.
கூச்சப்படாது காசில்லை என்று சொல்லி இவனிடம் கடன் வாங்கித் தின்றதுண்டு.
என் மற்ற தோழியரோடு சேர்ந்து நக்கல்
பல நாள் செய்ததுண்டு.
எப்படியோ என்னவோ செய்து
என்னைக் கவர்ந்துவிட்டானே ...
சிரிப்பா படிப்பா அழகா ஆற்றலா ...
அன்பா பண்பா ....
ஐயோ ... இன்றிவனைப் பார்க்கும் பொழுதே
என்னுள் ... ஒரு ...ஒரு...

*ஒரு வெட்கம் வருதே வருதே*

---

ஆறு கேட்டேன்
   அருவி தந்தனை
புத்தகம் கேட்டேன்
   நூலகம் தந்தனை
பருகநீர் கேட்டேன்
   பானகம் தந்தனை
மருந்து கேட்டேன்
   உணவு தந்தனை
உறக்கம் கேட்டேன்
   கனவு தந்தனை
*மலர்கள் கேட்டேன்*
   *வனமே தந்தனை*

---

போதுமென்ற மனம் வேண்டும்
பொன் பெண் மாயை விலக வேண்டும்

பேசுவதெல்லாம் உண்மையாக வேண்டும்
பேசாதிருக்க, பொறுமை நிறைய வேண்டும்

சுத்தமான நீர் காற்று வேண்டும்
சூடாய் உண்ண பசி வேண்டும்

கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும்
கிடைத்ததெல்லாம் கொடுத்துப் பழக வேண்டும்

படுத்தவுடன் உறங்க வேண்டும்
உறக்கத்தில் நல்ல கனவே வேண்டும்

அதிகாலை துயிலெல வேண்டும்
ஆத்திரம் அடக்கப் பழக வேண்டும்

புதுயுலகம் பிறக்க வேண்டும்
*புத்தம் புதுபூமி வேண்டும்*

பொன்மாலைப் பொழுதில் 7

இடை அளக்க வருவேனென்று
இமை மூடாது காத்திருக்காயோ !
விரலிணைத்து விளையாட வருவேனென்று
விழி மூடாது காத்திருக்காயோ !
காதல் கவிதைகள் சொல்லியுனை
பரவசப்படுத்துவேனென்று
கனவுகளோடு பலவோடு காத்திருக்காயோ !
கண்களால் அழைத்து, காதினுள் முத்தமிட்டு
கேட்டுத் தொட்டு, கேட்காது முட்டி ..... ம்ம்ம்
ஏதும் மறவாது எனக்காக காத்திருக்காயோ !

நானுந்தானடி காத்திருக்கேன்
நாளை வரும் நாளை எண்ணிக் காத்திருக்கேனடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி

***

அந்த அளவுக்கு இல்லை ஞானம்
இருப்பதைக் கொண்டு எழுத வேணும்
உன்னைப் பற்றி என்பதால் வார்த்தைகள் தானே வந்தமரும்
தினம் ஒரு சிலவரி வசனம்
பிடித்திருந்தால் வரும் விமர்சனம்
எது எப்படியோ எனக்கு நீயே பிரதானம்
என் பாடுபொருளெல்லாம் உன் புராணம்
நெஞ்சிலுண்டு உனக்கோர் உயர்ந்த ஆசனம்
பார்த்து ரசித்ததுண்டு நடையிலே அன்னம்
உன் விழிகள் ஆடும் நர்த்தனம் நாட்டியம்
உன் யவ்வனம் என் கவிதைக்குத் தீவனம் 
உன்னுளுண்டு அநுதினம் ஒரு நறுமணம்
அதன் ரகசியத்தை நீ செப்பனும்
என் அனுமானம் உன் ரண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்

***


கனவு கலையும், பொழுது விடியும்
கைப்பேசி வழி உன் காலை வணக்கம் வரும்
பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறந்துத் திரியும்
அலுவலகம் வந்தபின் 'இன்றென்ன எழுத?' என்றெண்ணம் உதிக்கும்
எதைச்சொன்னால் நீ ரசித்துச் சிரிப்பாய் என்று யோசிக்கத் தோன்றும்
கண்மூட மேகம் நீர்வீழ்ச்சி மலர்ச்சோலை இவையெல்லாம் வந்து போகும்
மனக்கண்ணுள் உன் முகம் தெரியும்
அவ்வமயம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

***